தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (Tamil Nadu Generation and Distribution Corporation) உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்



  • டெக்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ்

  • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 395

  • எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமென்டேசன் பொறியியல் - 09

  • கம்யூட்டர் / தகவல் தொழில்நுட்பம் பொறியியல் - 09

  • சிவில் பொறியியல் - 15


மெக்கானிக்கல் பொறியியல் - 50 


மொத்த பணியிடங்கள் - 500 


கல்வி மற்றும் பிற தகுதிகள்:


மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இது ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி ஆகும்.


வயது வரம்பு விவரம்:


Apprenticeship சட்டத்தின்படி வயது வரம்பு விதிகள் பின்பற்றப்படும்.


தெரிவு செய்யும் முறை:


இதற்கு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைகக்ப்படுவர். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


 இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 2020,2021, 2022, 20223 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும். 


ஊக்கத்தொகை விவரம்


இதற்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?



  • https://nats.education.gov.in/என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் மாணவர் பதிவு செய்யும் போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.

  • அதில் “TANGEDCO” என்றதை தேடி அதில் கிடைக்கும் இன்னொரு இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • பின்னர், அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்


விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.02.2024


பாரதிதாசன் பல்கலைகழகத்தில் உள்ள கள ஆய்வாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


கள ஆய்வாளர் 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க Psychology / Sociology / Social Work ஆகிய படிப்பிகளில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஆராய்ச்சி பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். கள ஆய்வில் ஈடுபட்டு அதனடிப்படையில் தரவுகள் சேகரிக்க வேண்டும்.


கரூர், தேனி,சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும். 


மேலே குறிப்பிட்ட ஊர்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


ஊதிய விவரம்


இதற்கு மாதம் 12,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


vinothkumarmei@buc.edu.in - என்ற மின்னஞ்சல் முகவரியில் சுயவிவர குறிப்புடன் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.02.2023


https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2024/psychology/Filed%20Investigators%20-%205%20Nos%20-%20Notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.




மேலும் வாசிக்க..


Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் - பதிவு செய்ய நாளையே கடைசி தேதி


IDBI Recruitment : 500 பணியிடங்கள்; வங்கி வேலை வேண்டுமா? பிரபல வங்கியில் வேலை- விவரம்!