தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் கண் மருத்துவ உதவியாளர் ( ophthalmic assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 09 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணி விவரம்:
கண் மருத்துவ உதவியாளர் ( ophthalmic assistant)
மொத்த பணியிடங்கள் - 93
கல்வித் தகுதி :
இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கண் மருத்துவ படிப்புகளில் ( Ophthalmic Assistant course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். Optometry துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
இந்தப் பணியிடத்திற்கு ரூ. 35,400முதல் ரூ. 1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-1)
வயது வரம்பு விவரம் :
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2023/DOCS/Ophthalmic%20Assistant%20notification.pdf
- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..