திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒன்றிய தலைப்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி கீழே காணலாம்.
பணி விவரம்
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்
11.10.2017--இன்படி ரூ.15,700-50,000 (Pay matrix Level1) என்ற ஊதியக்கட்டில் மாத ஊதியத்துடன் இதர படிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க.
விண்ணப்பதாரர்கள் கல்வி, இருப்பிடம், முன்னுரிமை சான்று `ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10.03.2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/02/2023021742.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்- 10.03.2023
மேலும் வாசிக்க..