திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இன்றிரவு 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோரையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 398 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரமும், நகர்ப் புறத்துக்கான மின்கட்டணம் ரூ.6 ஆயிரமும் செலுத்த ரூ.6 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://tnesevai.tn.gov.in/- அல்லது https://tnega.tn.gov.in/- என்ற இணைய முகவரியை பயன்படுத்த வேண்டும். வரும் 30-ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற செயலியைப் பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in- என்ற இணையதளத்தில் காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை
இதற்கு மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் http://www.tnesevai.tn.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி (Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு, போன்ற வழிகாட்டுதல்களைபூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இசேவை மைய கட்டடத்தில் கணினி பிரிண்டர், எப்கேனர்,மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 Mbps, அதிவேசு அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி., எண் பற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ - சேவை மையம் அமைக்க உரியம் வழங்கப்படும்.
- தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் சுய வேலைவாய்ப்புக்கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
- மதுரை மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.06.2023
மேலும் வாசிக்க..