தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் (Tamil Nadu And Historical Research) வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (30.06.2023) கடைசி.
பணி விவரம்:
ஆராய்ச்சி உதவியாளர் (Research Fellowship)
வரலாறு, தமிழ், சமூக அறிவியல், பெண்களின் வரலாறு, தேசிய இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வரலாறு, புவியியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு, சமூக அறிவியல், தமிழ் அல்லது அதற்கு நிகரான துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த ஓராண்டு கால ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உதவித்தொகை:
இதற்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
கவனிக்க..
ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆய்வு செய்து, சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் சமூகவரலாறு குறித்து பதிவு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முழு நேர பணிக்கான அறிவிப்பு.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்தின் விவரங்கள்மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றை ‘www.tnarchives.tn.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அலுவலகத்துக்கு வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://tnarchives.tn.gov.in/pdf/research_fellowship_appl.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.