சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனைப் படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


பொதுவாக பெரிய திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக ஒவ்வொரு சேனல்களிலும் விதவிதமாக சீரியல்கள் ஒளிபரப்பட்டாலும் அதன் அடிப்படை கதை என்று பார்த்தால் எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால் திரைக்கதையில் செய்யப்பட்டிருக்கும் மேஜிக் காலங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் அந்த சீரியலை நீங்கா இடம் பிடிக்க வைத்திருக்கும். 


அப்படி ஒரு சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’. திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலுக்கு பிரபல நடிகை வித்யா வசனம் எழுதுகிறார். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பழமையான எண்ணங்கள் கொண்ட வீட்டுக்கு நன்கு படித்த மருமகள்கள் சென்று சந்திக்கும் இன்னல்கள் தான் இந்த சீரியலின் அடிப்படை கதை. வயது வித்தியாசம் இல்லாமல் எதிர்நீச்சல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


கனிகா, இயக்குநர் மாரிமுத்து, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, சத்தியப்பிரியா என ஏகப்பட்ட பேர் தங்கள் கேரக்டர்களை குறைவில்லாமல் செய்து வருகின்றனர். பிற சீரியல்களுக்கு முன்னுதாரணமாக திகழும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


அதற்கு காரணமாக இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் 25வது வாரம் (கடந்த வாரம்) 11.16  புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் சீரியலாக மாறியுள்ளது. கடந்த வாரத்தில் ஆதிரை - கரிகாலன் இடையேயான கட்டாய திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


டிஆர்பி ரேட்டிங்


இதனிடையே நேற்று வெளியான சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியில் முதல் இடத்தை எதிர்நீச்சல் பெற்றிருந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தை கயல் தொடர் 10.88 புள்ளிகளுடனும்,  சுந்தரி தொடர் 9.85 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதேபோல் அண்ணன் தங்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடர் 9.71 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 5வது இடத்தை 9.62 புள்ளிகளுடன் இனியா தொடர் கைப்பற்றியிருந்தது. 


மேலும் படிக்க: தப்பு பண்ணிட்டீங்களே குணசேகரன்... வீட்டை விட்டு வெளியேறும் சக்தி ஜனனி... இன்றைய எதிர் நீச்சல் ஹிண்ட் தப்பு பண்ணிட்டீங்களே குணசேகரன்... வீட்டை விட்டு வெளியேறும் சக்தி ஜனனி... இன்றைய எதிர் நீச்சல் ஹிண்ட்