Recruitment of Apprentice Development Officer: நாட்டின் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்( எல்.ஐ.சி.) காலியாக உள்ள 9 ஆயிரத்து 394 தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம் :
அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer)
வணிக சந்தைப் பற்றிய புரிதலும், தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு எல்.ஐ.சி. ஏஜெண்ட் மற்றும் எல்.ஐ.சி. பணியாளர் என இரண்டு பிரிவுகளில் நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறது.
பணி இடங்கள்:
இதற்கு மத்திய, தென், கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். எல்.ஐ.சி. தென்மண்டலத்தில் மட்டும் தோராயமாக 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஃபெலோஷிப் (Felowship) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ,மாத உதவித் தொகையாக (Stipend) சுமார் ரூ.51,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அதிகாரியாக பதவி பெற்றவுடன் (Probationary Development: Officer), Gratuity, Defined Contiributory Pension Scheme, LTC, Group Insurance, உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனும், வளர்ச்சி அதிகாரியாக (Development Officer) 'பணி நிரந்தரம் பெற்றால், இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (Performance Linked Incentives) பெறவும் தகுதி பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
எல்.ஐ.சி. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/-இல் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கவனிக்க:
இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதலாம். இதற்கான பணிக்காலம் குறித்த எல்.ஐ.சி.-யின் முடிவே இறுதியானது. இதற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு நடைபெறும் விவரகள், இட ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
அறிவிப்பின் விவரத்திற்கு,.. சென்னை- https://licindia.in/Bottom-Links/Careers/SZ-Chennai-Employment-Notice-Notification-22-23
தொழில்பழகுநர் பயிற்சியின் விவரம் அறிய : https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2
இதையும் படிங்களேன்..
LIC Recruitment: எல்.ஐ.சி.யில் வேலை.. மாசம் 53 ஆயிரம் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!