நாட்டின் பொதுத் துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா  (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள சீனியர் மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். 


பணி விவரம்: 


Senior Manager


மொத்த பணியிடங்கள்: 26


கார்ப்ரேட் கிரெடிட் ரிஸ்க் மேனேஜ்மென்ட், க்ளைமேட் ரிஸ்க் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான மேலாளர் பணியிடங்கள் இந்த அறிவிப்புன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டய கணக்கர் அல்லது எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


சம்பந்தப்பட துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


கல்வி மற்றும் பணி அனுபவ தகுகளின்படி,  விண்ணப்பதாரர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல் திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: 


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 27 வயது உள்ளவர்களாகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


விண்ணப்ப கட்டணம்:


Intimation Changers -  பொதுப் பிரிவினர் மற்றும் OBC வகுப்பினருக்கு ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், PWD மற்றும் மகளிர் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். 
இந்த தொகை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 


ஊதிய விவரம்:


இந்தப் பணிகளுக்கான மாத ஊதியம், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.01.2023


https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணபிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரம் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-01/detailed-advertisement-risk-management-04-01-2023-03-20.pdf லிங்கை கிளிக் செய்யவும்.




மேலும் வாசிக்க..


Indian Post Jobs: அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; சென்னையில் நாளை மறுநாள் நேர்காணல்! கூடுதல் விவரம்!


ஆகாயத்தாமரையில் இருந்து அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை - 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு