நாட்டின் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer)
மொத்த பணியிடங்கள் : 300
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுனத்தில் ஏதாவது ஒரு துறையில் பி.ஏ/ பி.எஸ்சி மற்றும் பி.காம். போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01-01-2023 இன் படி 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு மூன்று நிலைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஊதிய விவரம்:
இதற்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ, 53,600 வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இணைய தள முகவரி www.licindia.in- என்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2023
அறிவிப்பின் முழு விவரத்தினை file:///C:/Users/jansi/Downloads/English-Notification-for-AAO(Gen)2023.pdf- என்ற லிங்க் மூலம் காணலாம்.
மேலும் வாசிக்க..
Job Alert : தற்காலிக செவிலியர் பணியிடங்கள்; மாத ஊதியம் எவ்வளவு? விவரம் இதோ!