கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (non- priority) வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


கல்வி மற்றும் பிற தகுதிகள் 


இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 இதற்கு விண்ணப்பிக்க 1.07.2023 அன்று படி, விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 37-வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்ப்படுபவர்களுக்கு  'Basic Pay ரூ.15,700/- + DA + HRA’ மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 10.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் அல்லது  மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :


தலைவர்,


மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.


107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம்,


அண்ணா நகர், தான்தோன்றிமலை,


கரூர்- 639 005.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2023 மாலை 5 மணி வரை


இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் அறிய Microsoft Word - OA Application Form NIC MBC DNC - Non Priority (s3waas.gov.in)- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.




26 Years of Love Today: சேராம போனாலும் ஓக்கேதான்.. கொண்டாடிய ரசிகர்கள்.. லவ் டுடே ரிலீஸ் ஆகி 26 ஆண்டுகளாச்சு..


HBD Sai Pallavi: மேக்கப் போடலன்னாலும் அழகுதான்.. விதிகளை உடைத்த பேரழகி.. சாய்பல்லவி பிறந்தநாள் இன்று..