காஞ்சிபுரம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் மாவட்ட நலச் சங்கம் (District Health Society) மூலமாக தற்காலிகமாக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 03 ஒப்பந்த பணியிடங்களை National Programme for Prevention and Control of Deafness NPPCD–Audiometrician-01, National Programme for Prevention and Control of Deafness NPPCD–Instuctor for the Young Hearing Imparied (Speech Therapist)-01 and Siddha District Programme Manager-01 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 31.12.2024 அன்று மாலை 05.45 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் /மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம்– 631 501.
அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.