தஞ்சாவூர்: அரியலூர், பெரம்பலூர் பகுதி வேலைவாய்ப்பற்ற வாலிபர்களே... உங்களுக்காக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரெத்தினசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். என்ன தெரியுங்களா?

Continues below advertisement

அரியலூர் மற்றும் பெரம்பலூர்  மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் வாலிபர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மற்றும் பெரம்பலூர்  மாவட்ட நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ஒரு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

இதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல்  மையங்கள் இணைந்து நடத்தும் இந்த மாபெரும்  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் வரும் 28.06.2025 (சனிக்கிழமை) அன்று மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, வளாகத்தில்  காலை  8 மணி   முதல்   பிற்பகல்  3 மணி   வரை   நடைபெற   உள்ளது.

Continues below advertisement

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் உள்ளுர் தனியார்துறை நிறுவனங்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 13.06.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் (Pan Card, GST Certificate, Incorporation certificate, Udyog Aadhar)  நேரில் வந்து தங்களது நிறுவனத்தை private job portal-ல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதேபோல் இந்த முகாமில் அரியலூர், பெரம்பலூரை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற தகுதியுள்ள வாலிபர்கள் இந்த முகாமில் பங்கேற்ற வேலை வாய்ப்பு பெறலாம். 

மேலும்  விவரங்களுக்கு  8098256681 என்ற தொலைபேசி எண் & E-Mail-ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார். எனவே இந்த வாய்ப்பை மிஸ் செய்யாம இப்பவே தயாராகிடுங்க வாலிபர்களே...!