சிஜிஎல் எனப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கு தகுதி வாய்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ஆட்சேர்ப்பு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 4 கடைசித் தேதி ஆகும்.
மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள், பல்வேறு அரசு நிறுவனங்கள் தீர்ப்பாயங்கள், அரசமைப்பு முகமைகளில் காலியாக உள்ள குரூப் பி, குரூப் சி பணி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தேர்வர்கள் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஜூலை 9 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
தேர்வு எப்போது?
Tier 1 மற்றும் Tier 2 என இரு கட்டங்களாக இந்தத் தேர்வு நடக்கிறது. ஆகஸ்ட் 13 முதல் 30ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
உத்தேசமாக 14,582 பணி இடங்களை நிரப்ப சிஜிஎல் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் பிறகு தேர்வு இடங்களில் சிறிது மாறுதல் இருக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் பட்டம் பெற்ற தேர்வர்கள், இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். 18 வயது முதல் 30 வரையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
- தேர்வர்கள் ssc.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், 'apply' என்ற பகுதியைச் சொடுக்குங்கள்.
- தோன்றும் 'SSC CGL 2025' ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை க்ளிக் செய்யவும்.
- லாகின் செய்து உள்ளே செல்லவும்.
- போதிய விவரங்களை உள்ளீடு செய்து, விண்ணப்பிக்கவும்.
- சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வருங்காலத் தேவைக்காக வைத்துக் கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://ssc.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.