தேனி மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது. 


சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை - அன்புமணி ராமதாஸ்




தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 அன்று  காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.  இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். 


பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை


இம்முகாமில் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். 




Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ


எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன்  தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 – 254510 அல்லது  94990 55936)  எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.