வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி குறித்த விவரம்


வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடிதிருந்துநர், வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கு திகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


காலி பணியிடங்கள்


வேலூர் மத்திய சிறையில் முடிதிருந்துநர் - 01
வேலூர் சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் - 01
 
கல்வித்தகுதி


எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1SC8eY_vX2Zi43V98QYNZDGA9FeJiGT3d/view


வருமானம்


முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கு தோராயமாக ரூ. 15,700 முதல் 50,000 வரை வருமானம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை


இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த தேர்வானது வேலூர் மத்திய சிறையில் நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது விவரம்


எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி  ஆகிய பிரிவினருக்கு 18 முதல 37 வயது வரையும், பிசி, எம்பிசி ஆகிய பிரிவினருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவினருக்கு 32 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


எப்படி விண்ணப்பிக்கலாம்


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் கல்வி, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு  அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் உரிய முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி


முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1SC8eY_vX2Zi43V98QYNZDGA9FeJiGT3d/view


முகவரி


சிறைக் கண்காணிப்பாளர்,
மத்திய சிறை, வேலூர் - 632001 என்ற முகவரிக்கு தபால் மூலம்  விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களை அறிந்து கொள்ள,


தொலைபேசி : 91-44-28521512 , 91-44-28521306
தொலைநகல் : 91-44-28585942
மின்னஞ்சல் : tnprison@gmail.com தொடர்ப்பு கொள்ளலாம்.




மேலும் படிக்க


TNPSC Jobs : மாதம் ரூ.1.30 லட்சம் வரை ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி.-இன் வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


Jobs :சுகாதார துறையில் வேலைவாய்ப்பு; இந்த மாவட்டத்தில் நாளை நேர்முகத் தேர்வு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?