திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு நாளை (13.12.2022) நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.இதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.
பணி விவரம்:
- Sector Health Nurse / Urban Health Manager - 2
- ஆய்வக உதவியாளர் கிரேட்-3 - 1
- அக்கவுண்ட் உதவியாளர் - 1
- Data Entry Operator - 2
- Audiometrician - 1
- Instrcuctor in the young Hearing imparied - 1
- Radiographer - 2
மொத்தப் பணியிடங்கள் - 10
கல்வித் தகுதி-
- Sector Health Nurse பணிக்கு நர்ஸிங் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். Urban Health Manager -பணிக்கு இளங்கலை நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஓராண்டு கால Medical Laboratory Technology டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
- அக்கவுண்ட் உதவியாளர் பணிக்கு பி.காம் படிப்புடன் கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். Tally தெரிந்திருக்க வேண்டும்.
- Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க கணிதம், Statistics துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு கம்யூட்டர் அப்ளிகேசன் துறையில் முதுகலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்ரைட்டிங்க சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டுகால பணி அனுபவம் வேண்டும்.
- Audiometrician பணிக்கு Rehabilitation Council of India-வின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு டிப்ளமோ (Diploma in Hearing, Language and Speech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Instrcuctor in the young Hearing imparied பணிக்கு Rehabilitation Council of India-வின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma in Training young deaf and Hearing Handicapped- DTYDHH) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Sector Health Nurse / Urban Health Manager - ரூ.25,000
ஆய்வக உதவியாளர் கிரேட்-3 - ரூ.13,000
அக்கவுண்ட் உதவியாளர் - ரூ.16,000
Data Entry Operator - ரூ.13,500
Audiometrician - ரூ.17,250
Instrcuctor in the young Hearing imparied - ரூ.17,000
Radiographer - ரூ.13,300
கவனிக்க:
இதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை தற்காலிகமானது என்றும் ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது; பணி நிரந்தரம் தொடர்பாக நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்களை இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
அறை எண்.240
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு திருப்பூர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 13.12.2022 நேரம்: 10.00 முற்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரை
தொடர்புக்கு:
தொலைபேசி எண். 0421-2478503
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/12/2022120120.pdf -என்ற லிங்கை கிளிக் செய்யவும்.