இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் விஞ்ஞானி / பொறியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

பணி விவரம்:

 

Scientist / Engineer - SD

 

Scientist/Engineer-SC

 

கல்வித் தகுதி:


  • Atmospheric Science / Space Science /Planetary Science ஆகிய துறைகளில் பி.ஹெச்.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • லெவல்-11 பணியிடத்திற்கு M.E., M.Tech, M.Sc., B.Tech, B.E. ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல், அப்ளைடு பிசிக்ஸ், சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். 

  • லெவல்-10 பணிக்கு M.E/M.Tech in Machine Design அல்லது 

  • Applied Mechanics , B.E/B.Tech in Mechanical Engineering OR Aerospace Engineering ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • இதற்கு விண்ணப்பிக்க 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


 

ஊதிய விவரம்:

 

Scientist / Engineer - SD Level 11 - ரூ.67,700 - ரூ. 2,08,700

 

Scientist / Engineer - SD Level 10 - ரூ.56,100 - ரூ.1,77,500

 

விண்ணப்ப கட்டணம்?

 

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பொதுப்பணித்துறை விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

 

தேர்வு முறை:

 

Scientist/Engineer-SD (1503 to 1505) பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 

 

Scientist/Engineer-SC பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 

விண்ணப்பிப்பது எப்படி?

 

https://www.vssc.gov.in/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.07.2023

 

இது தொடர்பாக கூடுதல் விவரத்திற்கு https://www.vssc.gov.in/advt327.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 



மேலும் வாசிக்க..


Jawan Trailer: இவங்க கண்ணுக்கு மட்டும் எப்டிதான் மாட்டுதோ.. ஜவான் ட்ரெய்லரில் விஜய்யைப் பாத்தீங்களா.. வைரலாகும் புகைப்படம்!


Mysskin: ‘இதிகாசங்கள் முழுக்க கொலைதான்’ .. ‘நான் கொலை படம் எடுக்கிறவனா?’ .. இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்..!