வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு.. ஜூலை மாதம் இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு, தனியார் பணி குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..
UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கள் (DiStrict Health society)
38,ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
நீலகிரி மாவட்டம்
குறிப்பு
1.விண்ணப்பங்கள் நேரிலோ விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
2. மின்னஞ்சல் முகவரி dphnl2g@nic.in3.மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது
4.பணியிடங்கள் நிரப்ப இன சுழற்சி முறையும் பின்பற்றப்படும்
விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2023
*********
EMRS Recruitment 2023: பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
- பள்ளி முதல்வர் -303
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266
- கணக்கர் -361
- இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759
- ஆய்வக உதவியாளர்- 373
விண்ணப்பிக்க கடைசி தேதி- 31.07.2023
இது குறித்து கூடுதல் தகவல்களை https://emrs.tribal.gov.in/backend/web/site/Information-Bulletin.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
********************
’Institute of Banking Personnel Selection’ என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
உதவி அலுவலர்
மொத்த பணியிடங்கள் - 4045
’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகள்:
பேங்க ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி,யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த வங்கி.
கல்வித் தகுதி:
21.07.2023-ன் படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.07.2023
இந்தப் பணிக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வித் தகுதி எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான முழு விவரத்தை https://www.ibps.in/wp-content/uploads/Final_Notification_CRP_CLERKS_XIII_30.6.23.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
**********
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையுல் உள்ள புரசைவாக்கம் வட்டத்தில் வ.ஊ.சி.நகரில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அனுவார், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்
பூங்கா நகர்.
சென்னை-3
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.07.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1fWgYRoctapfszjsA9ShtVWLzYbt-oRtN/view'- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.