சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணி விவரம்:
Pilot (Class I)
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
07.08.2023 -ன்படி, 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Deputy Conservator,
Marine Department,
Chennai Port Authority,
No.1,Rajaji Salai,
Chennai - 600 001
தொடர்புக்கு..
தொடர்பு எண் - 044 - 25360833
இ.மெயில் முகவரி - dc@chennaiport.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.08.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1gukc-_zzxw_dhwNdDH8DeM0tc3HU9ilx/preview - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
********
அண்ணா பல்கைக்கழகத்தில் 'CENTRE FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT ANNA UNIVERSITY’ துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
பணி விவரம்:
Makers - LAB
Startup Analyst / Manager
கல்வித் தகுதிகள்
இதற்கு விண்னப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Prototype development துரையில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Mechanical / Manufacturing / Printing / Production /ECE/EEE/ E &I/ CSE / IT/ Industrial ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000முதல் ரூ.60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை?
நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
http://auced.com/recruitment/ - என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
கவனிக்க..
- விண்ணப்பிக்கும்போது, சுய விவர குறிப்பில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பற்றி குறிப்பிட வேண்டும்.
- அஞ்சல் உறையின் மேல் ‘Application for the temporary post of ---------’ என்று குறிப்பிட வேண்டும்.
- இது தற்காலிக பணி வாய்ப்பு மட்டுமே; பணி நிரந்தரம் செய்யப்படாது.
- தேர்வு செய்யப்படுவதில் அண்ணா பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு..
இ-மெயில் - au.nhhid@gmail.com
தொடர்பு எண் - 044 - 22357953
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Director,
Centre for Entrepreneurship Development,
#302, Platinumn Jubilee Building, 2nd Floor,
AC Tech campus,
Anna University,
Chennai
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/Recruitment_CED_AU.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.