பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்புகளில் சேர விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கவும்.

Continues below advertisement

வழிகாட்டு நெறிமுறைகள்:

பி.எட். படிப்புகளில் அனைத்து வகை கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் பி.எட். படிப்புகளில் சேர்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதையடுத்து பி.எட் படிப்புகளில் சேர்வதற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடைசி நாள்: அக்டோபர் -3

பி.எட் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை, இன்று 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங் நடைபெறும் நாளாக அக்டோபர் 12ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு:

அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

’’அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும். 

மேலும் பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள TNGASABEd 2022 (tngasaedu.in) என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள Home | DCE (tngasa.in) இந்த லிங்கை செய்யவும்.

Also Read: Higher Education: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்: உயர் கல்வித்துறை