சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
குரூப் ஏ
- மூத்த பாதுகாப்பு அதிகாரி
- உதவி பதிவாளர்
- விளையாட்டு அதிகாரி
குரூப் பி
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- உதவி பாதுகாப்பு அதிகாரி
- உடற்கல்வி பயிற்சியாளர்
குரூப் சி
- ஜூனியர் உதவியாளர்
- சமையலர்
- ஓட்டுநர்
- காவலர்
மொத்த பணியிடங்கள் - 64
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் பணிக்கு 10-வது, 12-வது படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
குரூப் ஏ
மூத்த பாதுகாப்பு அதிகாரி - 50 வயது
உதவி பதிவாளர் - 45 வயது
விளையாட்டு அதிகாரி - 45 வயது
குரூப் பி
ஜூனியர் கண்காணிப்பாளர், உதவி பாதுகாப்பு அதிகாரி, உடற்கல்வி பயிற்சியாளர் - 37 வயது
குரூப் சி
ஜூனியர் உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ,காவலர் - 27 வயது
ஊதிய விவரம்
குரூப் ஏ
- மூத்த பாதுகாப்பு அதிகாரி - குரூப் - லெவல் -12
- உதவி பதிவாளர் - லெவல் -10
- விளையாட்டு அதிகாரி -லெவல் -10
- குரூப் பி பணியிடத்திற்கு லெவல் 6 மாத ஊதியம் வழங்கப்படும்.
- ஜூனியர் உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு லெவல் -3-ன் படியும் காவலர் பணிக்கு லெவல் -1ன் படியும் ஊதியம் வழங்கப்படும்.
தெரிவு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ட்ரேட் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பட்டியலின / பழங்குடியின பிரிவினர், மகளிர், PWD உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
https://recruit.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in
விண்ணபிக்க கடைசி தேதி - 12.03.2024 மாலை 05.30 மணி வரை
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..