சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ’Centre for Excellence for Road Safety (CoERS)’ துறையில் ’GIS Analytics’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

GIS Analytics

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இந்தப் பணிக்கு ‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் …

ஊதிய விவரம்:

இளங்கலை பட்டம் – ரூ.25,000

முதுகலை பட்டம் –  ரூ.35,000

முனைவர் பட்டம் – ரூ.60,000

மாத ஊதியத்துடன் மற்ற சலுகைகளும் வழங்கப்படும் என்றும், தகுதியிருப்பின் உயர்க்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி காலம்:

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பணி ஒப்பந்தம் வழங்கப்படும். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த அறிவிப்பு குறித்த விவரங்களை https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொண்டு தேவைவான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிகளின் அடிப்படையில் தேவ்ரு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2023

https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20GIS%20Analytics%20-%20Advt68..pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.

ஆல் தி பெஸ்ட்!


மேலும் வாசிக்க..

Rajinikanth's Jailer: ரஜினி ரசிகர்களே தயாராகுங்க... ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எஸ்பிஐ கிரெடிட் கார்டில் இனி இதற்கெல்லாம் கேஷ்பேக் கிடையாது… நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்!