உணவுத்துறையில் வேலை:

தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் பள்ளி படிப்பு மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவகால Watchman, Assistant, Record Clerk என மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு ஆள் சேர்க்கும் பணி துவங்க உள்ளது.

பணி குறித்த விவரங்கள்:

பணி-1: பருவகால பட்டியல் எழுத்தர் ( Record clerk )

காலிப்பணியிடங்கள் : 24

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல், வேளாண்மை, மற்றும் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு.

ஊதியம் : ரூபாய் 5,285 + அகவிலைப்படி ரூபாய் 3,499  மற்றும் தினசரி போக்குவரத்து படி ரூபாய் 120.

பணி-2: பருவகால உதவுபவர் (Assistant) காலிப்பணியிடங்கள் : 26

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி

ஊதியம் : ரூபாய் 5,218 +அகவிலைப்படி ரூபாய் 3,499 மற்றும் தினசரி போக்குவரத்து படி ரூபாய் 100.

பணி-3 : பருவகால காவலர் (Watchman) ஆண்கள் மட்டும்.

காலிப்பணியிடங்கள்: 23

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஊதியம் : ரூபாய் 5,218 + அகவிலைப்படி ரூபாய் 3,499 மற்றும் தினசரி போக்குவரத்து படி ரூபாய் 100.

 வயது வரம்பு (01.07.2022ன் படி)

SC/ST/SCA

BC/MBC/BCM

OC

37

34

32

 

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக

மேற்காணும் தகுதி உடையவர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் - 624001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அஞ்சல் வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.07.2022 மாலை 5 மணி.

குறிப்பு: இவை அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு மட்டும். மேலும் பணி நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் வேலை காத்திருக்கு..விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண