Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் வேலை காத்திருக்கு..விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.

Continues below advertisement

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210  Junior Court Assistant காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினி பயன்பாடு குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த மூன்றும் நன்கறிந்தவர்கள், இந்தப் பணிக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் குறைந்தபட்சம் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்

இந்தப் பணிக்கான உச்சபட்ச வயதுவரம்பு, 01.07.2022 தேதியின் படி விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 18 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வாய்ப்பையும் தவறவிட வேண்டாமே!! -IBPS CLERK NOTIFICATION 2022: வங்கிகளில் எழுத்தர் பணிகளில் காலியிடங்களுக்கான அறிவிப்பு..

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ. 500

தாழ்தப்பட்ட பிரிவினர்/ அரசுப் பணியில் இருந்தவர்கள்/ சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கு ரூ.250  கட்டண தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு முறை:

Objective Type ரக  கணினி அறிவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு. 
தவறான பதிலுக்கு 1/4 மார்க் நெடிகவிட் மார்க்காக குறைக்கப்படும்.

தட்டச்சு தேர்வு (ஆங்கில மொழியில் மட்டும்) - 20 நிமிடங்கள்

விரிவாக எழுதும் தேர்வு- 2 மணி நேரம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.07.2022

Junior Court Assistant பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://examinationservices.nic.in/examsys22/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFY7Opz8rrhi7HiNBBVaiudRq5bUYo4p+S66Vlvi7m6Sd

 

அறிவிப்பின் முழு விவரம்:

https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf

 

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்-- https://main.sci.gov.in/

ஆல் தி பெஸ்ட்!!


Baakiyalakshmi serial : கோபி உத்தமன் கிடையாது...உண்மையை போட்டுடைத்த மூர்த்தி...ஈஸ்வரி முடிவு என்ன தெரியுமா?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola