சமூக வலைதளங்களில் எப்போதும் வேலை தொடர்பான பதிவுகளை பலர் போடுவது வாடிக்கையாக உள்ளது. அதில் பல்வேறு வேலைகள் மற்றும் அதற்கு தேவையான தகுதிகள் குறித்து பலர் பதிவிட்டு தங்களுடைய குழுவிற்கு ஆட்களை எடுப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது டிக்டாக்கில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான தகவல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி அந்த அளவிற்கு அந்த வேலை வாய்ப்பு ட்ரெண்டாக காரணம் என்ன?


பொதுவாக எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதற்கு குறைந்தபட்சமாக ஒரு டிகிரி தகுதியாக இருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த வேலை வாய்ப்பு தொடர்பன அறிவிப்பில் அப்படி எந்த ஒரு டிகிரியும் தேவையில்லை என்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதன்படி எலினி பாவ்லோவிக்(24) என்ற பெண் ஒருவர் தன்னுடைய டிக்டாக் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தரவுகளை ஆராய்வது (Data Analysts) தொடர்பான வேலைக்கு எந்த ஒரு டிகிரியும் தேவையில்லை. அந்த வேலையில் நீங்கள்  செய்ய வேண்டியது என்ன தெரியுமா?




உதாரணமாக நீங்கள் டிக்டாக் தளத்தில் தரவுகளை ஆராயும் நபர் என்றால் இந்த தளத்தில் வரும் வாடிக்கையாளர்களின் செயல் மற்றும் அவர்களின் பயன்பாட்டை ஆராய வேண்டும். அதன்பின்பு அதிகபட்சமான வாடிக்கையாளர்கள் எந்த விஷயங்களை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த செயலில் எந்தெந்த விருப்பங்களை வாடிக்கையாளார்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து கொடுக்க வேண்டும். அதுவே அந்த வேலையின் சிறப்பு அம்சம். 


இந்த வேலைக்கு எந்தவித டிகிரியும் தேவையில்லை. இதற்கு என்று ஒரு சில ஆன்லைன் படிப்புகள் உள்ளன. அதை மட்டும் படித்துவிட்டு ஒரு சில தரவுகளை ஆராய்ந்து மிகவும் தன்னப்பிக்கையுடன் நேர்காணலை எதிர்கொண்டால் போதும் அவர்களுக்கு வேலை நிச்சயமாக கிடைக்கும். அதிலும் குறிப்பாக இரண்டு வருடம் முன் அனுபவம் இருந்தால் 60 ஆயிரம் பவுண்ட் வரை சம்பளம் கிடைக்கும்" எனக் கூறியுள்ளார். 


இந்த தரவுகளை ஆராயும் பணிகளுக்கு ஒரு சில சாஃப்ட்வேர் டூல்ஸ் பயன்படுத்த வேண்டும். அவற்றில் சிலவற்றை இந்த ஆன்லைன் வகுப்புகளில் எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக கற்று தரப்படும். மேலும் பைதான் (Python) என்ற கணினி மொழியை பயன்படுத்தினால் எளிதாக இந்த டேட்டா அனாலிஷ்ட் வேலையை செய்யலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:ரிஷப் பண்ட்டுக்கு இப்படி ஒரு பயிற்சி கொடுக்கும் தோனி.. வைரலாகும் ஃபோட்டோஸ்..