இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள சூப்பர் வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.


இந்தியாவில் குருகிராமைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தான் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சாரப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.  இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகக்கூடும். இந்நிலையில் தற்போது சூப்பர் வைசர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், என்னென்ன தகுதிகள் விண்ணப்பதார்கள் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) என ஏதாவதொரு பிரிவில் முழுநேர டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதோடு  55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:  இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 29 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம் : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 23 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் https://www.powergrid.in/sites/default/files/Detailed%20advt.pdf?download=1 என்ற இணையதளப்பக்கத்தின் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் பெயர், கல்வித்தகுதி, சுய விபரம் போன்றவற்றைப் பூர்த்தி செய்து அனுப்பி வேண்டும். இதோடு மறக்காமல் விண்ணப்படிவத்தில் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 300 விண்ணப்பக்கட்டணமாகவும்,. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வு செய்யும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே  உள்ள நிலையில் அனைத்து விபரங்களையும் எடுத்துவைத்துக்கொண்டு உடனடியாகவிண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.  இதோடு மட்டுமின்றி அவ்வப்போது பவர் கிரிட்டில் அப்ரண்டிஸ் ஆவதற்கான அறிவிப்பு வெளியாகும். இதனை  https://www.powergrid.in/ என்ற இணையதள முகவரியின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.