மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை கீழ் செயல்பட்டு வரும் கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.


தேசிய சுகாதார திட்டத்தின் கீழ்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் ’Trauma Care’ திட்டங்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம் :


செவிலியர் (Staff Nurse
(Trauma Registry))


கல்வித் தகுதி :


இதற்கு விண்ணப்பிக்க நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கப்படும். 


நிபர்ந்தனைகள்:



  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

  • பணியில் சேர்வடஹ்ற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking ) அளிக்க வேண்டும்.

  • நேர்முக தேர்வு நடத்தப்பட்டும் நாளில் அதை தவறவிட்டாம் இந்த பணிக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படாது. 


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். 


விண்ணப்ப படிவங்களை கடலூர் மாவட்ட வலைதளமான https://cuddalore.nic.in/-என்ற லிங்கில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய - https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2022/12/2022121613.pdf


இ-மெயில் முகவரி - cuddalore.jdhs@gmail.com


கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றி அறிவிப்புகளை  https://cuddalore.nic.in/notice_category/recruitment/- என்ற இணையதள முகவரியில் காணலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.01.2023 மாலை 5.45 மணி வரை 


இந்த வேலைவாய்ப்பின் விவரத்தை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2022/12/2022121613.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.




இதையும் படிக்கலாமே..


Group 1 Timetable: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இங்கே..


https://tamil.abplive.com/jobs/railway-recruitment-2022-southern-railway-recruitment-apply-southern-railway-rrc-sportsperson-job-vacancies-official-website-91556/amp