மத்திய அரசின் மினிரத்னா நிறுவனங்களின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited (CSL))தளத்தில் ‘f Ship Draftsman Trainees’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி விவரம்:

Ship Draftsman Trainee (Mechanical)

Ship Draftsman Trainee (Electrical)

மொத்த பணியிடங்கள் - 76 

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் மூன்றாண்டுகால டிப்ளமோ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

இரண்டு ஆண்டுகாலம் பயிற்சி காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு, பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மூன்று ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையிலான பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி கால ஊக்கத்தொகை:

முதலாம் ஆண்டு - ரூ.12,600/-

இரண்டாம் ஆண்டு -ரூ.13,800/-

கூடுதலாக பணி செய்யும் நேரத்திற்கு மாதத்திற்கு ரூ.4,450/-

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிக்க 2023, ஏப்ரல், 19-ன் படி 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

டிப்ளமோ படிப்பில் எடுத்த மதிப்பெண், ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

https://cochinshipyard.in/ - என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.04.2023

இந்தப் பணி தொடர்பான கூடுதல் தகவல்களை https://cochinshipyard.in/uploads/career/11f4398e22f07bf6da1bf04f408a25e9.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் தொடர்புக்கு இ-மெயில் முகவரி - career@cochinshipyard.in.


மேலும் வாசிக்க...

CMRL Recruitment 2023: சென்னை மெட்ரோவில் வேலை; ரூ.1.50 லட்சம் வரை ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Job Alert: நாள் ஒன்றுக்கு ரூ.1000 சம்பளம்; மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!.