புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Program cum Administrative Assistant) பணியிடத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Program cum Administrative Assistant)
கல்வி மற்றும் அடிப்படைத் தகுதிகள்:
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தேசிய நலக்குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.12,000- வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கவனிக்க..
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை
விண்னப்பிக்க கடைசி தேதி- 20.05.2023 மாலை 5.00 மணி வரை
----
சென்னை வேலைவாய்ப்பு:
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
வழக்கு அலுவலகர்கள் (Case Worker) -6
பாதுகாப்பாளர் (Security Guard)-2
பன்முக உதவியாளார் (Multi Purposer Helper) - 1
மொத்த பணியிடங்கள் - 9
கல்வி மற்றும் பிற தகுதிகள்
வழக்கு அலுவலர்கள் பணிக்கு விண்ணபிக்க ’Social Work’ துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 ஆண்டு முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
வழக்கு அலுவலர்கள் - ரூ.15,000
பாதுகாப்பாளார் - ரூ.10,000
பன்முக உதவியாளர்- ரூ.6,400
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை-01
மின்னஞ்சல் முகவரி - chndswosouth@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள் - 22.05.2023
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/05/2023050517.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.