தமிழ்நாடு முழுவதும் அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதித் தேர்வு ஏதும் இல்லை. நாளை (17.05.2023) நடக்கும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 


பணி விவரம்:


கால்நடை மருத்துவ ஆலோசகர்




பணி இடம்:


கன்னியாகுமரி 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். இரண்டு/ நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 


வயது வரம்பு:


அதிகபட்ச வயது வரம்பு பற்றி அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 


ஊதிய விவரம்:


கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (அடிப்படை ஊதியம் - ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)


தேர்வு செய்யப்படும் முறை:


நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே-17 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


நேரடி தேர்வு நடைபெறும் இடம்:  


The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd.,


K.P.Road,


Nagercoil – 629 003. , Tamil Nadu .


Email : aavinkk@gmail.com


Tel : 04652 - 230356


Fax: 04652-230785 


இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்காணல் நடைபெறும் நாள்: 17.05.2023 / 11 மணி முதல்..




மேலும் வாசிக்க..


Job Alert: மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி; மாதம் ரூ.30,000 ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி?


Job Alert: டிகிரி படித்தவர்களா நீங்கள்? அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?