அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்ட கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஆசியரியர்
கல்வித தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து தமிழ் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
- தமிழில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
- NET/SLET/ SET தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.25,000 வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ்கள் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ 20.12.2022 (மாலை 5 மணிக்குள்) அன்றோ அல்லது முன்பாகவோ அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: dirtamildvt@annauniv.edu
குறிப்பு:
அசல் விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. உமா மகேஸ்வரி,
இயக்குநர்,
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் (CPDE Building),
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை - 600 025
தொலைபேசி எண் : 044 2235 8592 / 93
இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://www.annauniv.edu/pdf/Temporary%20Teaching%20Fellow%20_Notification.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
Anna University Recruitment : மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி; முழு விவரம்!
தமிழ்நாட்டில் எந்தெந்த தினங்கள் அரசு விடுமுறை: வெளியானது 2023 பட்டியல்!