தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். 731 பணியிடங்களுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தைக் கீழே காணலாம். 


பணி விவரம்:


கால்நடை உதவி மருத்துவர்




மொத்த காலிப்பணியிடங்கள் : 731


கல்வித் தகுதி: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ( Bachelor in Veterinary Science) கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கால்நடை கவுன்சிலின்
மருத்துவராக பணியாற்ற பதிவு செய்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்பட உள்ளது. 


வயது வரம்பு: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 தேதியின் படி 32  வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பின் விவரத்தை படித்து தெரிந்து கொள்ளவும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணிக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


 தேர்வு பாடத்திட்டம்:




உடல் தகுதி :


இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கான உடற்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:


விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.


தேர்வு மையங்கள்:


இந்தப் பணிக்கு சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு கட்டணம்:


விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டு காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பதிவு கட்டணம் – ரூ .150


 எழுத்துத் தேர்வு– ரூ.200




எப்படி விண்ணப்பிப்பது?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்  https://apply.tnpscexams.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்,


அறிவிப்பின் முழு விவரம்- https://tnpsc.gov.in/Document/tamil/36_2022_ACF_TAM.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.


முக்கியமான நாட்கள்:




 


விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2022 


இணைவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 22.12.2022 நள்ளிரவு 12:01 மணி முதல் 24.12.2022 இரவு 11:59 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.


கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் : 15.03.2023 முற்பகல் 09:30 மணி முதல் பிற்பகல் 12:39 மணி வரை