அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையில் செயல்பட்டு வரும் ‘அண்ணா கம்யூனிட்டி வானொலி’ நிலையத்தில் காலியாக உள்ள தயாரிப்பு உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


தயாரிப்பு உதவியாளர் (Production Assitant)


கல்வித் தகுதி:



  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்சி நிறுவனத்தில் இதழியல் துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெயின்ஸ்ட்ரீம் ஊடகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

  • தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்றாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • ஆடியோ, வீடியோ நிகழ்ச்சி தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். 

  • தூர்தர்ஷன், அகில் இந்திய வானொலி ஆகிய நிறுவனங்களின் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பர்களாக எதிர்பார்க்கப்படுகிறது. 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.30,000/- வழங்கப்படும். 


விண்ணப்பிக்க முறை:


இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் “Application for the post of Production Assistant” என்று அஞ்சல் உறைமீது குறிப்பிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். 


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு வழியாக அறிவுறுத்தப்படும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


The Head, Department of Media Sciences,
 CEG Campus, Anna University, 
Chennai – 600 025.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.04.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Production%20Assistant%20Notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 




மேலும் வாசிக்க..


BSF Recruitment:டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - எப்படி விண்ணப்பிப்பது?


NVS Recruitment 2024: 1,377 பணியிடங்கள்; மத்திய அரசு வேலை; விண்ணபிக்க மறந்துடாதீங்க!