தஞ்சாவூரில் உள்ள விமானப் படை பள்ளியில் (Air Force School Thanjavu) உள்ள தலைமையாசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 




பணி விவரம்


தலைமையாசிரியர் ( Headmistress (HM))


கல்வித் தகுதி



  • பல்கலைக்கழக மானியக் குழு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் விமானப் படை பள்ளியில் தொடக்கநிலை, இடைநிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • விமானப்படை பள்ளியில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து மற்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது. 

  • பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  •  PGT/ TGT/PRT நிலையில் இரண்டு ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.NTT மற்றும் தலைமையாசியராக இருந்த அனுபவம் வேண்டும்.

  • ஆங்கில மொழியில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • MS Office,  Conversant with POCSO Act, CBSE rules, NCERT, இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  • CTET/STET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் தெரிவு செய்யும் முறையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை


http://www.afschoolthanjavur.edu.in/career.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


EXECUTIVE DIRECTOR
AIR FORCE SCHOOL THANJAVUR
THANJAVUR – 613 005
TELE: 04362 226126


தொடர்புக்கு /
 
இ -மெயில் : afschooltjanjavur@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.02.2024 


IAF Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


பணி விவரம்:


அக்னிவீர்வாயு பணியாளர்கள்


அக்னிபத் திட்டம் 


அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.


கல்வித் தகுதி: 



  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 

  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வோக்கேசனல் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  • ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 21- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf - தெரிந்துகொள்ளலாம். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.




அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 17-தேதி உடற்தகுதித் தேர்வு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.


Physical Fitness Test (PFT)




விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2024