சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில்  காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.


பணி விவரம்



  • நூலகர்

  • அலுவலக உதவியாளர்

  • ஓட்டுநர்

  • உதவி மின் பணியாளர் 


கல்வித் தகுதி



  • நூலகர் பணிக்கு 10-வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • உதவி மின் பணியாளர் பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்



  • நூலகர் - ரூ.18,500 - ரூ.58,600/-

  • அலுவலக உதவியாளர்- ரூ.18,500 - ரூ.58,600/-

  • ஓட்டுநர் - ரூ.18,500 - ரூ.58,600/-

  • உதவி மின் பணியாளர் - ரூ.16,600 - ரூ.52,400/-


இதர நிபந்தனைகள்


இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி


கபாலீசுவரர் கோயில்,


மயிலாப்பூர்,


சென்னை - 04


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2024  மாலை 5.45 வரை 


வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு - https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்


இளநிலை மின் பொறியாளர்


கல்வித்தகுதி:



 



  • தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்;

  • மின் பொறியியல் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு - 18 வயது முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்தல் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: நேரடியாக அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கவும்.

  • தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.


ஊதிய விவரம்


 இதற்கு ஊதியமாக ரூ.35,900 - ரூ.11,3500 /- வழங்கப்படுகிறது.


நிபந்தனை:



  • இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்

  • விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


இணை ஆணையர்/ செயல் அலுவலர்


அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்


திருச்செந்தூர்,


தூத்துக்குடி - 628 215


தொலைபேசி: 04639 - 242221


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில்  http://www.tiruchendurmurugan.hrce.in.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 

  •  விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்.

  • பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். 

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2024


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38271/3161/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்