2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரவுள்ளது என்பது நாடே எதிர்பார்க்கும் விஷயம். இணைய சேவையின் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி என வரவிருக்கும் உலகத்துக்கு தேவையான வேகத்தை அளிக்க 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம், 26 ஆம் தேதி தொடங்கியது. அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தவிர்த்து, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.

Continues below advertisement

1.5 லட்சம் கோடிக்கு ஏலம்

மொத்தம் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) விற்பனைக்கு தயாராக இருந்தது. இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 51,236 மெகாஹெர்ட்ஸ் மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஏலத்திற்கு முன்னதாக 4.3 லட்சம் கோடிக்கு ஏலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்து மிகப்பெரிய தொகை வெறுபாட்டில் வெறும் 1.5 லட்சம் கோடிக்கும் மட்டுமே ஏலம் சென்றிருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

Continues below advertisement

லாபகரமானது

ஆனால் இந்த ஏலம் பல வகையில் லாபகரமானது என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 3000 மெகா ஹெர்ட்ஸ் பேண்டுகளில் 5G அலைக்கற்றைகளின் முன்மொழியப்பட்ட விற்பனை மற்றும் முன்பு விற்கப்படாத 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் விற்பனையைத் திரும்பப் பெற வேண்டும் என்று போராடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரியதால், பங்குதாரர்களுடன் TRAI ஆலோசனை நடத்திய போதிலும் இது நடைபெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்: பாரதிராஜா எல்லா எடுபிடி வேலைகளையும் செய்தார்.. எங்க தெரியுமா? கமல் சொன்ன சீக்ரெட்

ஏஜிஆர் நிலுவை தொகை

2019 டிசம்பரில், டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (டிசிசி) 2020 ஆம் ஆண்டில் 8300 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் ஏலத்திற்கான இருப்பு விலையை ரூ. 5.2 லட்சம் கோடியாக முடிவு செய்தது. ஆனால் கடன் சுமையில் உள்ள வோடஃபோன் ஐடியாவை மூடுவது சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற கடன் சுமையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சுணக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நஷ்டத்தில் வாடும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, ஏஜிஆர் நிலுவைத் தொகையை தாமதப்படுத்தி செலுத்தியதற்காக அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள முடியாமல் கூட போயிருக்கும் என்று கூறுகிறார்கள். 

700 மெகா ஹெர்ட்ஸ் ஏலம்

இறுதியாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்த பிறகு, அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5G ஸ்பெக்ட்ரம் ஏலங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் மொத்த அலைக்கற்றையில் வெறும் 37 சதவீதத்தை மட்டுமே விற்க முடிந்தது. அதன் மூலம் ரூ. 77,815 கோடியை ஈட்டியது. இருப்பினும், 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தைப் விற்கமுடியாமல் போனது, ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பணமில்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் இருப்பு விலை மிக அதிகமாக இருப்பதாக கூறினர்.

பிரதீப் முல்தானி

தற்போது நடந்து முடிந்த ஏலத்தில் 700 MHz அலைகற்றையை விற்றதே பெரும் வெற்றி என்று கூறுகிறார்கள். “விலை உயர்ந்த 700 MHz அலைகற்றையை ஜியோ நிறுவனம் வாங்கியது மிகவும் ஆச்சர்யமான விஷயம். 5ஜி அலைக்கற்றையின் வெற்றிகரமான ஏலமானது நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கான அறிகுறியாகும். கணிசமான அளவு ஏலம் போனது, தொழில்துறை விரிவாக்கப் பயன்முறையில் இருப்பதையும், புதிய வளர்ச்சி சுற்றுப்பாதையில் நுழைவதையும் குறிக்கிறது,” என்று PHD சேம்பர் தலைவர் பிரதீப் முல்தானி ABP லைவ்விடம் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.