ஜூலை 28-ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது. மருத்துவர் பாருக் சாமுவேல் ப்ளம்பெர்க்கின் பிறந்தநாளில் ஹெபடைடிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு மருத்துவர் மற்றும் மரபியல் நிபுணர் ஆவார். இவர் ஹெபடைடிஸ் பி வைரஸை 1967 -இல் கண்டுபிடித்தார். மற்றும் முதல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கியவரும் இவர் தான்.
உலக ஹெபடைடிஸ் தினம் 2023: முக்கியத்துவம்
கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஹெபடைடிஸ் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ், ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்க பொதுவான காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹெபடைடிஸ் இல்லாத எதிர்காலத்தை அடைய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஹெபடைடிஸ் என்றால் என்ன ?
ஹெபடைடிஸ் மிகவும் பொதுவான கல்லீரல் கோளாறுகளில் ஒன்றாகும். இது நம்முடைய கல்லீரலில் அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியால் உண்டாகும் ஒரு பிரச்சினை. பிலிரூபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் இருந்து ஹீமோகுளோபின் உடைந்து வெளியேறும் போது உற்பத்தி செய்யப்படும் மஞ்சள்-ஆரஞ்சு நிற பித்த திரவம் ஆகும்.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்
குளிர் காய்ச்சல், வயிற்று வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல், எடை இழப்பு, தோல் அரிப்பு, மூட்டுகளின் வீக்கம், கல்லீரல் அழற்சி, சரும நோய்கள் போன்றவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என கூறப்படுகின்றது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க,
வகுப்பறையில் பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட்! - பதறவைக்கும் வீடியோ