பெண்கள் அதிகமாகச் சிரித்தாலோ, தும்மினாலோ, விளையாடும் போதோ தன்னை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன? யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனதளவில் பெண்கள் பிரச்சனையைச் சந்தித்துவருகின்றனர்.


 குழந்தைகள் தான் அறியாத வயதில் எந்த இடம் என்றாலும் சிறுநீர் கழித்துவிடுவார்கள். ஆனால் இந்த பிரச்சனையை தற்போது பெரும்பாலான பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனை சிறுநீர் கசிவு பிரச்சனை என மருத்து ரீதியாகக்கூறப்படுகிறது. இந்நேரத்தில் முதலில் நாம், சிறுநீர் கசிவு பிரச்சனை என்றால் என்ன? எப்பொழுதெல்லாம் இந்த பிரச்சனைகளை மக்கள் சந்திக்கிறார்கள் என  தெரிந்துக்கொள்வோம். இந்த சிறுவர் கசிவு பிரச்சனை என்பது தூங்கும் போது மட்டும் ஏற்படுவது இல்லை. குறிப்பாக அதிக எடைக் கொண்டவராக இருக்கும் போது, சிரிக்கும் பொழுது, இருமும் போது,  உடலுறவுக்கொள்ளும் போது என பல சாதாரண சந்தர்ப்பங்களில் பெண்கள் இந்த பிரச்சனைகளை சந்தித்துவருகிறார்கள். இதனை “ சிறுநீர் அடங்காமை“ என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.





இந்தப்பிரச்சனைக்கு கருப்பை மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் தசைகளின் பலவீனம் காரணமாக சீறுநீரைக்கட்டுப்படுத்த முடியாமல் இந்த நிகழ்வு எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படுகிறது.  இதுப்போன்ற பிரச்சனையை தான் சந்திப்பதாக தனது உறவினர்களிடம் கூறுவதற்கு சில பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அவர்கள் உடல் மற்றும் மனதளவிலும் பாதிப்புகளைச்சந்திக்கின்றனர். இதுக்குறித்து மறைத்து வைக்காமல் மருத்துவர்களிடம் முறையாக  தெரிவித்து சிகிச்சைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படக்காரணம் என்ன?


பெண்களில் பலருக்கு இப்பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், பெரும்பாலும் கருப்பை மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் தசைகளின் பலவீனம், உடல் பருமன், குழந்தைப்பிறப்பிற்கு பிறகு இடுப்புப்பகுதியில் ஏற்படும் மாற்றம் முக்கியக்காரணங்களாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இடைவிடாத இருமல் அல்லது நாள்பட்ட மலச்சிக்கலுடன் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது இந்த சிக்கல் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சிறுநீர் கசிவு பிரச்சனையை சரிசெய்யும் முறை:


பெண்கள் இதுப்போன்ற பிரச்சனைகளை வாழ்வில் சந்தித்து வந்தால், முதலில் மகளிர் மருத்துவ நிபுணர்களுடன் இப்பிரச்சனைக்குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். மேலும் அன்றாட வாழ்க்கை முறைகளில் சிலவற்றைக்கடைபிடித்தாலே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




முதலில் 24 மணி நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் தண்ணீரின் சராசரி அளவு பட்டியல் எவ்வளவு என்பதை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்க சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் உடனடியாக கழிவறைக்குச் செல்லக்கூடாது. இதை அடக்கி வைத்துக்கொள்ள சிறுநீர்ப்பைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இப்படி 2-5 நிமிடங்களிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை படிப்படியாக இப்படி சிறுநீர் வலுப்படுத்துவதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் போது பாடல் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேறு வழிகளில் மனதை மாற்ற வேண்டும்.

உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடைக்குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கருப்பை மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த கெகல் என்னும் உடற்பயிற்சியை எந்த நேரத்தில் மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் நிறைய தண்ணீர் மற்றும் இளநீர் குடிக்க வேண்டும். மேலும் சிறுநீர் கழிக்கையில் அதிக வலி ஏற்பட்டால் பரங்கிக்காய் சாற்றைக்குடித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதோடு குறைவாக சிறுநீர் போகும் பிரச்சனை இருந்தால் உலர்ந்த திராட்சை ஜூஸ் குடிக்கவும் மற்றும் அதிக சிறுநீர் போவதை தடுக்க தேன் பருகலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?