செக்ஸைப் பொறுத்தவரை பெண்களைவிட ஆண்கள் எளிதில் அயற்சி அடைந்துவிடுவார்கள்  பெண்களால் ஒரே நேரத்தில் ஒருமுறைக்கு மேல் கூட உடலுறவு கொள்ள முடியும் ஆனால் ஆண்கள் அயர்ந்து தூங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு.


உடலுறவு முடிந்ததுமே பார்ட்னர் தூங்குவது இயல்பானதா? உடலுறவு அயற்சி எவ்வளவு நேரம் இருக்கும் உங்கள் பார்ட்னர் இப்படி அயர்ச்சியில் தூங்குவது உங்களுக்குப்  பிரச்னையாக இருந்தால் அதனை சரிகட்ட என்ன செய்யலாம்? 


 உடலுறவு முடிந்த உடனேயே பார்ட்னர் தூங்குவது இயல்பானதுதான். அது மனித உடலில் ஏற்படும் இயல்பான அயற்சியால் உண்டாவது.ஆனால் *இதனைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் உடலுறவுக்குப் பின் தனது பார்ட்னர் ஏன் தன்னைக் கட்டிப்பிடித்துக் கொள்ளவில்லை, ஏன் பேசவில்லை, ஏன் முதுகைக் காட்டிக் கொண்டு தூங்குகிறார், ஒருவேளை பார்ட்னர் திருப்தியடையவில்லையோ என ஏதேதோ யோசித்து ஒவர்நைட்டில் ஒரு ஆய்வறிக்கையே தயாரித்து முடித்திருப்பார்கள். 




ஆனால் உண்மைக் காரணங்கள் என்ன? 



காரணம் 1: இரவு நேரத்தில் உடலுறவு கொள்வது ஏற்கெனவே டயர்டாக இருக்கும் மனித உடலை மேலும் அயர்ச்சியாக்கும். அதனால்தான் தூக்கம் வரும். அந்த நேரங்களில் உடலுறவு என்பது உடலுக்காக என்று இல்லாமல் உங்களது பார்ட்னருக்கு ஒரு ரிலாக்ஸாகவே இருக்கும் அதன் தொடர்ச்சியாக இயல்பாகவே தூக்கம் வந்துவிடும்.


காரணம் 2: பாலுணர்வு தூண்டப்படும்போது ஆண்களுக்கு விந்தணு வெளியேறுவதால் உடல் ஒரு தளர்ச்சியான நிலைக்குச் சென்றுவிடும் அதனால் தூக்கம் சாதாரண சூழலை விடக் கூடுதலாகவே வரும். 


காரணம் 3: செக்ஸின் போது மூச்சை அடக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. இதனால் நாடித்துடிப்பு ஆழமாகும். ஆக்சிஜன் பற்றாக்குறை உடலில் ஏற்படும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் உடலுக்கு ரெஸ்ட் தேவைப்படும்.


காரணம் 4: உடலுறவுக்குப் பின் தூக்கம் வருகிறது என்றால் உடலுறவு எல்லாம் நல்லமுறையில் நடந்திருக்கிறது எனலாம்.மிக அரிதான நபர்களில்தான் உடலுறவுக்குப் பின் அயர்ந்து போகும் ஆண்களில் உடல் ரீதியான பிரச்னைகள் இருக்கும். அந்த நேரங்களில் உங்களது ஈகோவைச் சற்று ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு  மருத்துவரை அணுகுவது நல்லது.


இதற்கான தீர்வுகள் என்ன? 


தூங்கப் போவதற்கு முன்பு காஃபி குடித்துவிட்டுச் செல்லலாம். இது நிரந்தரத் தீர்வு இல்லையென்றாலும் காஃபி பாலுணர்வைத் தூண்டும். காஃபியில் இருக்கும் கெஃபைன் அயர்ச்சியைப் போக்கினாலும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.அதனால் பார்த்துச் சூதனமாகப் பருகவும். 


திராட்சைப்பழத்தை எத்தனையோ சினிமாக்களின் முதலிரவுக்காட்சி ஐட்டங்களில் பார்த்திருப்போம். ஆனால் அந்த திராட்சைக்குப்பின்னால் ஒரு பெரிய படுக்கையறை அரசியல் உண்டென்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஃபிர்ட்ஜில் வைத்தெடுத்த திராட்சையைச் சாப்பிடுவது தூக்கத்தைக் குறைக்கும். பொதுவாகவே சிட்ரஸ் பழங்களுக்கு தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் இயல்பு உண்டு. மற்றொரு பக்கம் ஆல்கஹால்களும் தூக்கத்தைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவும். அதையே மிகக் குறைவாக உபயோகிப்பது நல்லது. அதிகமாகப் பயண்படுத்துவது தூக்கத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.


Also Read: ரயிலில் தொடங்கி... ரயில்வே சாலையில் முடிந்த சந்திப்பு! காதல்... கழுத்தறிப்பில் முடிந்தது ஏன்?