சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.அவரின் மகள் சுவேதா(25) இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.  இன்று பகல் 1.30 மணியளவில் ஸ்வேதா கல்லூரி முடிந்து, சகமாணவிகளுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்து,மின்சார ரயிலில் குரோம்பேட்டை செல்வதற்காக ரயில்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது ரயில்நிலைய வளாகத்தில் மரநிழலில் நின்று கொண்டிருந்த ஸ்வேதாவின் ஆண் நண்பரான, திருக்குவளையை சோ்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞா், சுவேதாவை அழைத்து பேசினாா்.சில நிமிடங்கள் பேசியவா்கள்,பின்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா்.



 

அப்போது ராமச்சந்திரன் திடீரென,தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருத்த கத்தியை எடுத்து, ஸ்வேதா கழுத்தை அறுத்தாா்.ஸ்வேதா அலறிக்கொண்டு கீழே விழுந்தாா். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் ராமச்சந்திரனை பிடிக்க முயன்றனா்.அவா் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியபடி ,தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு  கீழே விழுந்தாா். அந்த காட்சியை பாா்த்து பொதுமக்களும்,சக மாணவ, மாணவிகளும் அலறியடித்து ஓடினா். போலீஸ் வந்து இருவரையும் ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பாா்க்கும்போது ஸ்வேதா உயிரிழந்திருந்தாா். அவா் உடல் சவக்கிடங்கிற்கு அனுப்பப்படது. ராமச்சந்திரனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கொலையாளி ராமச்சந்திரன் திருவாரூா் மாவட்டம் திருக்குவளையை சோ்ந்தவா். இவா் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி.இவா் கூடுவாஞ்சேரியில் தங்கியிருக்கிறாா். மறைமலைநகரில் அருகே உள்ள  காா் கம்பெனியில்  பணி செய்து வருகிறாா். கல்லூரி மாணவி குடும்பம் குரோம்பேட்டையில்  வசித்து வந்தாலும், அவா்களுடைய பூா்வீகம் மயிலாடுதுறை.  இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் ராமச்சந்திரன் தாம்பரத்திலிருந்து ரயிலில் அவா்களுடைய சொந்த ஊருக்கு சென்றாா். அதே ரயிலில் அதே கேரெஜ்ஜில் ஸ்வேதாவும் அவா்களுடைய சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றாா். அப்போது இவா்களுக்குள் ஏற்பட்ட ரயில் நட்பு, அதன்பின்பு காதலாக மாறியது.

 

இந்நிலையில் சமீபகாலமாக ராமச்சந்திரனை சந்தித்துத்து பேசுவதை ஸ்வேதா தவிா்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு ராமச்சந்திரன் போன் செய்தால்,ஸ்வேதா எடுப்பது கிடையாது . அல்லது நீண்ட நேரமாக பிஸி என்றே வந்துள்ளது. இது ராமச்சந்திரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஸ்வேதா வேறு யாரிடமோ பேசுகிறாா். எனவே தான்,தன்னிடம் பேசுவதை படிப்படியாக குறைக்கின்றாா் என்று ராமச்சந்திரன் நினைத்தாா். நேற்று இரவும் ராமச்சந்திரன் போன் செய்தபோது நீண்ட நேரமாக பிஸ்சியோகவே இருந்துள்ளது.



இந்நிலையில் இன்று இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற ஆத்திரத்துடன் ராமச்சந்திரன், கல்லூரி வாசலில் காத்திருந்தாா். பகல் 1.30 மணிக்கு கல்லூரியிலிருந்து ஸ்வேதா வெளியே வந்ததும், ராமச்சந்திரனும் ஸ்வேதாவுடன் பேசிக்கொண்டே ரயில்நிலைய வளாகத்திற்குள் வந்தனா்.அங்கு மரத்தடியில் நின்று இருவரும் பேசினா். ஒரு கடத்தில் இருவரும் சண்டையிட்டு உள்ளனர். ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், பேண்ட் பாக்கேட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆவேசமாக எடுத்து ஸ்வேதா கழுத்தை அறுத்துவிட்டு,தனது கழுத்தையும் அறுத்த சம்பவம் நடந்துள்ளது. 



 

முன்னதாக,  மாணவுயின் உறவினர்கள் 100 க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் ஒன்று திரண்டு உரிய விசாரணை மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடலை வாங்கமட்டோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்பு உறவினர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இச்சம்பவத்தால் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.