வைட்டமின் கே என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் குழு ஆகும், இது இரத்த உறைதல், எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கால்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த உறைதல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான "புரோத்ராம்பின் (prothrombin)" என்ற புரதத்தை உற்பத்தி செய்ய உடலுக்கு வைட்டமின் கே தேவைப்படுகிறது. இருப்பினும், வார்ஃபரின் (warfarin) அல்லது கூமடின் (Coumadin) போன்ற இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் வைட்டமின் கே உட்கொள்ளலை அதிகரிக்கும் முன் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.



வைட்டமின் கே எதில் கிடைக்கும்?


வைட்டமின் K இன் குறைபாடு அரிதானதுதான், ஆனால் அப்படியான சந்தர்ப்பம் வந்தால், மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் குறைபாடு இருந்தால், காயங்கள் ஏற்படும் இடத்தில் இரத்தம் உறைய அதிக நேரம் எடுக்கும். இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வைட்டமின் K நிறைந்துள்ள முதன்மை உணவு வைட்டமின் K1 ஆகும், இது தாவரங்களில் காணப்படும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றொன்று வைட்டமின் K2 அல்லது மெனாகுவினோன் ஆகும், இது சில விலங்குகள் சார்ந்த மற்றும் புளித்த உணவுகளில் இருக்கும். பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் டாக்டர் பிரசாந்த் மிஸ்ட்ரி வைட்டமின் கே-வின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


வைட்டமின் கே-வின் நன்மைகள்:


எலும்பு ஆரோக்கியம்


வைட்டமின் கே உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் வரும் வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. பல ஆராய்ச்சிகள் வைட்டமின் K உணவுமுறையானது எலும்புகளை உறுதியாக்குவதாகவும், எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் எலும்பு முறிவுகளின் ஆபத்து குறைகிறது. இருப்பினும், ஆய்வுகள் இன்னும் இதை நிரூபிக்கவில்லை.



நினைவாற்றல்


வைட்டமின் K உண்பதால் இரத்த வரம்புகள் அதிகரிக்கின்றன. இதனால் வயதானவர்களுக்கு ஞாபகசக்தி மேம்படுகிறது. ஒரு ஆய்வில், 70 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான மக்கள், ஊட்டச்சத்து K1- ஐ அதிக அளவு எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் இருப்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இதய ஆரோக்கியம்


வைட்டமின் கே, தமனிகளில் தாதுக்கள் உருவாகும் இடத்தில் கனிமமயமாக்கலை (mineralisation) நிறுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் கரோனரி இதயம் உடல் வழியாக இரத்தத்தை எந்த தடங்களும் இன்றி பம்ப் செய்ய அனுமதிக்கிறது. கனிமமயமாக்கல் இயற்கையாகவே வயதுக்கு ஏற்ப நிகழ்கிறது, மேலும் இதனால் கரோனரி இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் உள்ளன. அது பக்கவாததிற்கு வழி வகுக்கும். ஊட்டச்சத்து K ulla உணவுகளை தேவையான அளவு எடுத்துக்கொண்டால் பக்கவாதத்தின் அச்சுறுத்தலைக் குறைக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.