கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடு உள்பட 40 இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், முதலிலேயே இந்த சோதனையையின் போது கரூர் துணை மேயர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் திரும்பி வந்த அவர்கள் மீண்டும் இரவு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போதும் கரூர் துணை மேயர் வீடு பூட்டி இருந்ததால், அந்த வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல் வைக்க்ப்பட்டுள்ளதால் தற்போது அந்த பகுதியில் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.