நாள்: 27.05.2023 - சனிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


புதுவிதமான கனவுகள் தோன்றும். பலதரப்பட்ட சிந்தனைகள் மற்றும் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


ரிஷபம்


உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


மிதுனம்


விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். புத்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சோதனைகள் குறையும் நாள்.


கடகம்


தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். இன்பம் நிறைந்த நாள்.


சிம்மம்


திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதில் அணியும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கன்னி


பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களை அவமதிக்கும் போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். நேரத்திற்கு உணவினை சாப்பிடுவது நல்லது. எதிர்பாலின மக்களிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். பரிவு வேண்டிய நாள்.


துலாம்


இணையம் சார்ந்த பணிகள் மற்றும் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். நிர்வாக ஆற்றல் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேர்ச்சி நிறைந்த நாள்.


விருச்சிகம்


உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


தனுசு


ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்பும் மேம்படும். வேளாண்மை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.


மகரம்


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது நிதானத்துடன் செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.


கும்பம்


நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


மீனம்


உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.