இனிப்பான திண்பண்டங்களை எல்லோருமே விரும்புவோம். அது இனிப்புடன் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருந்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவோம் தானே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உலர் பழ லட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்


பாதாம் - 100 கிராம் 


உலர் கஜூர்- 100 கிராம் 


முந்திரி -100 கிராம் 


பிஸ்தா - 100 கிராம் 


உலர்ந்த தேங்காய் - 100 கிராம் 


பாப்பி விதைகள் ( குஸ் குஸ்)- 50 கிராம் 


நெய் - 250 கிராம் 


உண்ணக்கூடிய பசை- 100 கிராம் 


வெல்லம் - 250 கிராம்


திராட்சை - 50 கிராம்


செய்முறை


நெய்யை சூடாக்கி உலர் கஜூர், உண்ணக்கூடிய பசை, பாதாம், திராட்சை, முந்திரி, கொப்பரை மற்றும் கசகசாவை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் கருகி விடாமல் மிதமான அளவில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


இதனை ஆற வைத்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.


பாகு பதம் வந்த பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 


இப்போது இந்த வெல்ல பாகுடன் பேரீச்சம்பழம் , கொட்டை கலவையை சேர்த்து லட்டு பிடிக்க வேண்டும்.  இதை காற்றுப்புகாத ஜாடிகளில் மூடி வைத்து ப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். 


( குறிப்பு : வெல்லம் பாகு செய்ய ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து மூன்று பங்கு வெல்லத்திற்கு ஒரு பங்கு தண்ணீரை சேர்க்க வேண்டும். பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெல்லத்தை சூடு படுத்த வேண்டும். வெல்லம் உறுகி நுரை நுரையாக பொங்கி வரும்.  இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு ஒரு சிறிய டம்ளரில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்த பாகை ஒரு சிறு கரண்டியால் எடுத்து ஒரு துளியை தண்ணீரில் விட வேண்டும்.  அந்த வெல்லத்துளி அப்படியே முத்துப்போன்று நீருக்கடியில் சென்று நின்று விட்டால் பாகு சரியான பதத்திற்கு வந்து விட்டது என்று அர்த்தம். 


வெல்லத்துளி தண்ணீரில் கரைந்து விட்டால், மேலும் ஓரிரு நிமிடங்கள் அதை பாகு பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.  அடிக்கடி பாகு பதம் வந்து விட்டதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதை மிகவும் கெட்டியாகி விடும். அதில் லட்டு பிடிக்க வராது. )


மேலும் படிக்க


EPS Condemns: “மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்


Vijayalakshmi On Seeman: சீமான் வீடியோவிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? கைது நடவடிக்கை வேண்டும் - விஜயலட்சுமி போலீசில் புகார்