தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் ஆயிரத்து 116 நபர்கள் இன்ப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதுக்குட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 5-14 வயதுக்குட்பட்ட 60 குழந்தைகளுக்கும், 14 வயது முதல் 60 வயது வரையிலான 194 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட 71 நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.




இவர்களில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 260 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 96 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.


மேலும் படிக்க : பொறியியல்: இட ஒதுக்கீடு பெற்று, வேறு இடத்துக்கான காத்திருப்பில் கட்ட வேண்டிய தொகை எவ்வளவு?- அறிவிப்பு வெளியீடு


காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறும். சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெறும்.




இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த காய்ச்சல் முகாம்களில் 476 நடமாடும் மருத்துவ குழுவினர் ஈடுபடுவார்கள். 3 நபர்களுக்கு மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் இருக்கும் பகுதியில் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில்,  கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். 


மேலும் படிக்க : Nakkeeran Reporter attacked: பத்திரிகையாளர்களைத் தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா... சீமான் கடும் கண்டனம்!


மேலும் படிக்க : " நீ SC தானே " .....ஒன்றிய குழு தலைவரை கேட்ட அமைச்சர் பொன்முடி...பரபரப்பான மேடை..!