குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும். இது மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், சின்னம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் கொண்டுள்ளது.




நோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் விதத்தில் வித்தியாசம் இருப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்தினாலும், சரும அறிகுறி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளால் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.


Also Read| CWG 2022 Lawn Bowls:காமன்வெல்த் லான் பவுல்ஸ் : மூன்று முறை வென்ற அணியை வீழ்த்தி, தங்கம் வென்ற இந்திய அணி..


மழைக்காலத்தில், மக்கள் வைரஸ் தொற்றுகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். சரும அறிகுறி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளுடன், மற்ற நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து சின்னம்மைக்கான அறிகுறிகளை காட்டுகின்றன.


குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, சில சமயங்களில் தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்த அனைத்து அறிகுறிகளும் சரும சிவப்பாகுதல் போன்ற பிற பிரச்சனைகளுக்கு, நான்கு நாட்களுக்கு முன்பே தோன்றும். கண் மற்றும் வாய் பகுதியிலிரிந்து தொடங்கி, உடல் முழுவதும் பரவுகிறது.


சமீபத்தில் பதிவாகிய ஓரிரு நிகழ்வுகளில், குரங்கு காய்ச்சலின் சந்தேகத்திற்குரிய இரண்டு பேருக்கு சின்னம்மை என்று தெரியவந்தது.


சமீபத்தில் டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் ஒருவர் காய்ச்சல் மற்றும் சரும சிவப்பாகும் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு என்று சந்தேகப்படும்போது, அவருக்கு சின்னம்மை இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதேபோல், பெங்களூரு சென்றிருந்த எத்தியோப்பியா குடிமகன் ஒருவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவருக்கு சின்னம்மை இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.




இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உள்ளது. ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், இன்டர்னல் மெடிசின், இயக்குனர் டாக்டர் சதீஷ் கவுல் கூறுகையில்,


“குரங்கு அம்மையில், சின்னம்மை நோயை விட புண்கள் பெரிதாக இருக்கும். குரங்கு அம்மையில், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் புண்கள் காணப்படும். சின்னம்மையில், ஏழு முதல் எட்டு நாட்களுக்குப் பிறகு புண்கள் தானாகவே வரம்பிடுகின்றன, ஆனால் குரங்கு அம்மையில் அவ்வாறு இருக்காது. சின்னம்மையில் புண்கள் அரிப்புடன் இருக்கும் ஆனால் குரங்கு அம்மையில் அரிப்பு இருக்காது." குரங்கு அம்மையைப் பொறுத்தவரை காய்ச்சலின் காலம் அதிகமாக இருக்கும் என்றும் கோல் கூறினார்.


மழைக்காலம் சின்னம்மையின் சீசனாக கருதப்படுகிறது. பொதுவாக, மழைக்காலத்தில், ஈரப்பதம் அதிகரிப்பு, நீர் தேங்குதல், ஈரப்பதம் மற்றும் ஈரமான ஆடைகள் அகிய அனைத்தும் வைரஸ் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.




தற்போது குரங்கு அம்மை தொடக்க நிலையில் உள்ளது. அதற்கான சரியான சிகிச்சை இல்லை. நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளியை தனிமைப்படுத்தி, அவர்களின் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.


சின்னம்மை மற்றும் குரங்கு அம்மைக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் காரணமாக பல நாடுகள் சின்னம்மை தடுப்பூசிகளை வழங்க அனுமதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் அது இன்னும் அனுமதிக்கப்படவில்லை.