காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ் போட்டியில் மகளிர் 4s பிரிவில் இந்தியாவின் லவ்லி, பின்கி,நயன்மோனி மற்றும் ரூபா திர்கே ஆகியோர் குழுவாக பங்கேற்றுள்ளனர். இவர்கள் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 16-13 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. அத்துடன் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 


 


இந்நிலையில் இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் முதல் 8 சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 8- 4 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 


 






அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 11வது சுற்றின் முடிவில் 10-8 என முன்னிலை பெற்றது. 12வது, 13வது மற்றும் 14வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். இதன்காரணமாக கடைசி சுற்றுக்கு முன்பாக 15-10 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று இருந்தது. இறுதியில் இந்திய அணி 17-10 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் தங்கப்பதக்கத்தையும் இந்திய அணி வென்று அசத்தியது. முதல் முறையாக லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணிக்கு 4வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்திய அணி தற்போது வரை 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 10 பதக்கங்களை வென்றுள்ளது. இன்று டேபிள் டென்னிஸ் குழு மற்றும் பேட்மிண்டன் கலப்பு குழு இறுதிப் போட்டி ஆகியவை உள்ளது. எனவே இன்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண