சபின்டுசியே குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய சதை கொண்ட பழம் லிச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவையான பழத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள சதை இனிப்பாக இருக்கும். உள்ளே கருப்பாக ஒரு பெரிய விதை இருக்கும். அதனை சுற்றிய உடையக்கூடிய ஸ்ட்ராபெரி சிவப்பு நிற சாப்பிடக் கூடாத தோல் இருக்கும், அதனை உரித்துவிட்டுதான் பழத்தை உண்ண வேண்டும்.


நீர், கார்போஹைட்ரேட்டுகள்:


இந்த பழங்கள் பொதுவாக அப்படியே உண்ணப்படுகின்றன, அல்லது ஜுஸ் போன்றும், ஐஸ்கிரீம்களில் கலந்தும் உட்கொள்ளப்படுகின்றன. ஒயின் மற்றும் ஜெல்லியாக பதப்படுத்தப்பட்டும் பயன்படுகின்றன. இந்த லிச்சி பழங்கள் நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளாக திகழ்கின்றன. உடலுக்கு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகின்றன. லிச்சியின் முக்கிய பொருட்கள் நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்தான். அவற்றில் கணிசமான அளவு தாமிரம் மற்றும் பொட்டாசியம் உள்ளது மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. நீங்கள் லிச்சியை அதிகம் சாப்பிடும் நபர் இல்லை என்றால், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்த பிறகு கண்டிப்பாக அதை தேடி செல்வீர்கள். 


லிச்சி ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது


அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன. அவை நம் உடலில் இருந்து ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீரிழிவு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன என்பதை அறிந்தால் அனைவருக்கும் அதிர்ச்சிதான், ஆனால் அதுதான் உண்மை.



லிச்சி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது


பலர் அனுபவிக்கும் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உணவில் லிச்சியை சேர்த்துக்கொள்வதன் மூலம் இயற்கையாகவே BP அளவைக் குறைக்கலாம். லிச்சியில் போதுமான அளவு பொட்டாசியம் உள்ளது, இது சாதாரண இரத்த அழுத்தத்தை பாதுகாக்க உதவுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Adipurush: ஹனுமானுக்கு 10 சீட் கூட கொடுக்கறோம்.. ஆதிபுருஷ் படம் ஹவுஸ்ஃபுல் ஆகுமா? கடுப்பான திருப்பூர் சுப்பிரமணியம்..!


லிச்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது


லிச்சி செரிமானத்தை ஆதரிக்கும் அழற்சி எதிர்ப்பு விஷயங்களை வழங்குகிறது. கூடுதலாக, இதில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளன. இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.



நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது


நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று சரியான உணவுகளை சாப்பிடுவது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புகளின் வளர்ச்சியை ஆதரிக்கும். பல உணவுகள் இருந்தாலும், இந்த லிச்சி ஒரு அற்புதமான இயற்கையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது. லிச்சி வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.


தோல் மற்றும் முடிக்கு உதவுகிறது


உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையான தீர்வுகளை தேடுபவர்களுக்கு, இந்த பழம் விடையாக இருக்கலாம். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பளபளப்பைக் கொடுக்கவும் உதவும். வைட்டமின் ஈ, லிச்சியில் ஏராளமாக உள்ளது. வைட்டமின் ஈ தோல் எரிச்சலை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், லிச்சியில் உள்ள தாமிரம் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.