அழகான ஆரோக்கியமான கூந்தலைப் பெற ஆசை கொள்ளாதவர்கள் யாரும் இல்லை. ஏராளமான முடி பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், இயற்கை வைத்தியம்தான் உங்கள் தலைமுடிக்கு பயனுள்ளதாகவும் மென்மையாகவும் இருக்கும். அதில் ஒரு பிரபலமான தீர்வுதான் வெந்தயம். சக்திவாய்ந்த பண்புகளுக்கு பெயர் பெற்ற வெந்தயம் முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.


முடிக்கு வெந்தயத்தின் நன்மைகள்



  • வெந்தயம் முடியின் அடிப்பகுதிகளுக்கு ஊட்டமளித்து, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுவதாக கூறப்படுகிறது. வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடியின் தண்டை பலப்படுத்தி, முடி உதிர்வைக் குறைத்து, புதிய ஆரோக்கியமான இழைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

  • வெந்தயம் வறட்சியைக் குறைக்க உதவும் சிறந்த கண்டிஷனிங் பண்புகளைக் கொண்டுள்ளன. வெந்தயத்தை ஒரு ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும்.

  • வெந்தயங்களில் ஹார்மோன்-ஒழுங்குபடுத்தும் கலவைகள் உள்ளன. அவை ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்க உதவுகின்றன. கூடுதலாக, விதைகளில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை உச்சந்தலையில் நோய்த்தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கின்றன, இதனால் முடி உதிர்தல் அபாயம் குறைகிறது.

  • வெந்தயங்களில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன. வெந்தயம் எண்ணெயைத் தவறாமல் பயன்படுத்துவது உச்சந்தலையில் வீக்கம், அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லையுடன் தொடர்புடைய பிரச்சினைகளை குறைக்க உதவும்.



முடிக்கு எப்படி பயன்படுத்துவது


வெந்தய முடி மாஸ்க்



  • வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைக்கவும்.

  • கூடுதல் ஊட்டத்திற்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது தயிர் சேர்க்கவும்.

  • உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் அந்த பேஸ்ட்டை தேய்க்கவும்.

  • சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும்.


தொடர்புடைய செய்திகள்: Neeraj Chopra Mother : வீரனை வீரனா பாருங்க.. பாகிஸ்தான் வீரர் ஜெயிச்சாலும் சந்தோஷம்.. நீரஜ் சோப்ரா அம்மாவின் சாட்டையடி பதில்


வெந்தயம் மூலம் முடியைக் கழுவ



  • இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரண்டு கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

  • கலவையை குளிர்வித்து, வடிகட்டவும். ஷாம்பு தேய்த்து குளித்த பிறகு, வெந்தயம் வேக வைத்த தண்ணீரில் கழுவவும்.

  • வெந்தய நீரை உங்கள் தலைமுடியில் தேய்க்கும்போது தலையை மெதுவாக மசாஜ் செய்யவும்.

  • சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும்.



வெந்தய எண்ணெய்



  • தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெயில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு சூடாக்கவும்.

  • விதைகள் சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை சில நிமிடங்கள் வைக்கவும்.

  • பின்னர் எண்ணெயை குளிரவிட்டு, அதை வடிகட்டி, சுத்தமான கொள்கலனில் சேமிக்கவும்.

  • வெந்தய விதை எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் விட்டு, பின்னர் வழக்கம் போல் ஷாம்புவில் கழுவவும்.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.