உலக சுகாதார அமைப்பு (WHO) பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பூஞ்சைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


பூஞ்சை நோய்


உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான தீவிர நோய்த்தொற்றுகள் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஆண்டுதோறும் பூஞ்சை நோய்த்தொற்றுகளால் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு 19 பூஞ்சைகளை அடையாளம் கண்டுள்ளது. டெய்லி மெயில் அறிக்கையின்படி, அவை பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதால் அவற்றுக்கான சிகிச்சை அளித்தாலும் வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த பூஞ்சை நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் பரவுகிறது.


பெரும்பாலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு போராடுபவர்கள் போன்ற, நோயெதிர்ப்பு குறைந்த நபர்களை இந்த பூஞ்சை நோய்க்கிருமிகள் குறிவைக்கின்றன. மேலும் ஸ்டெராய்டு எடுத்துக்கொள்பவர்களின் உடலில் இந்த பூஞ்சை நோயை எதிர்க்கும் சக்தி வெகுவாக குறையும்.



நிதி பற்றாக்குறை


மிகவும் கொடிய பாக்டீரியாக்களின் ஒப்பிடக்கூடிய பட்டியல் WHO ஆல் வெளியிடப்பட்டது. பூஞ்சைகளுக்கு என்று தனியாக நிதி ஒதுக்காததால் இதோடு சேர்த்தே ஆபத்தான பூஞ்சைகளின் பட்டியலையும் உருவாக்கியது. WHO இன் கூற்றுப்படி, பூஞ்சை தொடர்பான நோய்த்தொற்றுகள் அவர்களின் ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாத போதிலும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் அதனையும் வெளியிட்டுள்ளனர். பூஞ்சை நோய்க்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகக்குறைவாக இருக்கும் காரணத்தால் நோயறிதல் மற்றும் சிகிச்சைகள் பற்றிய நமது புரிதலில் வரலாற்று ரீதியாக பெரிய இடைவெளிகள் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்: லட்சுமி, விநாயகர் வேண்டாம்....ரூபாய் நோட்டில் மோடி படத்தை அச்சிடுங்கள்... ஃபோட்டோஷாப் புகைப்படத்துடன் பாஜக எம்எல்ஏ ட்வீட்!


ஹனன் பால்கி


உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் ஜெனரல், ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (AMR) டாக்டர் ஹனன் பால்கி பேசுகையில், "பாக்டீரியா நுண்ணுயிர் எதிர்ப்பு தொற்றுநோய்களின் நிழல்களில் இருந்து வெளிவரும், அதோடு பூஞ்சை தொற்றுகளும் வளர்ந்து வருகின்றன, மேலும் தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்து சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பதில்லை, இது உலகளவில் பெரும் சுகாதார கவலையாக மாறி வருகிறது", என்றார்.



உலக நாடுகள் முன்வர வேண்டும்


19 வகையான அபாயகரமான பூஞ்சைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துமாறு உலக நாடுகளை சுகாதார அமைப்பு ஊக்குவித்தது. WHO இன் AMR குளோபல் ஒருங்கிணைப்புத் துறையின் இயக்குநரான Dr. Haileyesus Getahun கருத்துப்படி, "உலக நாடுகள் தங்கள் பூஞ்சை நோய் ஆய்வகம் மற்றும் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள தரமான சிகிச்சை முறைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதில் தொடங்கி, படிப்படியான அணுகுமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகின்றன.", என்றார்.


பூஞ்சையின் பண்புகள், அதன் வாழ்விடங்கள் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவாக அதன் பரவல் மாற்றம், புதிய பூஞ்சை வகைகள் தோன்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. WHO அறிக்கையை விஞ்ஞான சமூகம் பாராட்டியது, சிகிச்சையை எதிர்க்கும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகளை உருவாக்குவதற்கான சரியான திசைக்கு இது முதல் படி என்று விவரிக்கிறது.